பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அவற்றை வாரி எடுத்து, நாரைகள் இன்னும் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காத முட்டைகள் என எண்ணி, அம் முட்டைகளின் உள்ளிட்டை உண்பதற்காக ஆமைகளின் முதுகுகளில் அவற்றை உடைக்கின்றனராம். "நள்ளி வாங்கு கடையிள கவ்வியர் வெள்ளி வால்வளை வீசிய வெண்மணி அள்ளி, காரைசினை பொரியாத, என்று உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால்' (44) நள்ளி=பெண் நண்டு. ஆண்யானை களிறு எனவும் பெண் யானை பிடி எனவும், ஆண் பறவை சேவல் என்றும் பெண் பறவை பெடை என்றும், மரங்களிலே ஆண்பனை பெண்பனை என்றும் குறிப்பிடப்படுவது போல்வே நண்டு களிலும் ஆண் நண்டு அலவன் என்றும் பெண் நண்டு நள்ளி என்றும் பெயர் குறிப்பிடப்படும். இதனைப் பெரிய திரும்ொழியில் உள்ள "பள்ளிக் கமலத் திடைப்பட்ட . பகுவாய் அலவன் முகம் நோக்கி கள்ளி ஊடும் வயல்' ... " சூழ்ந்த நறையூர் (6 7 6) என்னும் பாடலால் அறியலாம். ஆணாகிய ೨/೦೧/T மீது பெண்ணிாகிய நள்ளி ஊட்ல் கொள்கிறாதம், நவ்வி=மான். நவ்வியர் = மான் போன்ற பெண்கள்-கடை இளநவ்வியர்= உழவுத் தொழில் புரியும் பெண்டிரைக் கடைசியர் எனவும் உழத்தியர் எனவும் கூறுதல் மரபு. வெள்ளி வால்வளை= வெள்ளிபோன்ற வெண்மையான சங்கு வெண்மணி=முத்து. முத்துகளை நாரையின் முட்டை என எண்ணி உண்ணத் தொடங்கிய முயற்சியால், கோழி முட்டைகளை உண்பது போல், நாரையின் முட்டைகளையும் உண்பது உண்டு என அறியலாம். முட்டைகளை உடைக்க ஆமையின் முதுகில்