பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 275 அடிப்பதைக் கொண்டு, ஆமை முதுகின் திட்பத்தையும் வலிமையையும் அறியலாம். அந்த ஒட்டுக்குள் தானே ஆமை நான்கு கால்கள்-தலை ஆகிய ஐந்தையும் அடக்கிக் கொண்டுள்ளது. ஆமையைக் கொல்லவேண்டு மெனில் மேல்பகுதி ஒட்டை ஒன்றும் செய்யமுடியாது-கவிழ்த்துப் போட்டு அடிப்பகுதியை அடித்தே கொல்லவேண்டும். பாவம்! முத்துகள் வேறு பொருள்கள் போல் தோன்றுவதாக இலக்கியங்களில் கூறப்படுவதுண்டு. புகார்க் கடற்கரையில் சிறுமியர் சிற்றில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனராம். ஓர் அலை வந்து அந்த மணல் வீடாகிய சிற்றிலை மூழ்கிக் கலைத்துவிட்டதாம். உடனே சிறுமியர், கடலை நோக்கி, என் அம்மாவிடம் சொல்கிறேன் பார் என்று, தங்கள் மாலைகளில் உள்ள முத்துகள் கீழே விழுவதையும் அறியாமல் அலறி ஓடினராம். அந்த முத்துகளை வழிப் போக்கர்கள் புன்னை அரும்பு என மயங்கிச் (மாறி எண்ணிச்) சென்றனராம். இந்தக் கருத்துடைய பாடல் ஒன்று தண்டி யலங்கார உரையில் உள்ளது. அது: 'முன்னைத் தம்சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக, அன்னைக்கு உரைப்பன் அறிவாய் , கடலே என்று அலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்து : - உகுத்த வெண்முத்தம் தயங்குகானல் புன்னை அரும்பேய்ப்பப் போவாரைப் - பேதுறுக்கும் புகாரே எம்மூர்’ என்னும் பாடல். பெண் நண்டு, உயிர்ச்சங்குகள், நாரை, ஆமை முதுகு ஆகியவற்றை வைத்துக் கொண்டு கம்பர் விளையாடி நமக்குக் கற்பனை நயச்சுவை அளித்துள்ளார் இப்பாடலில். - -