பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. . கிட்கிந்தா காண்டத் திறனாய்வு யாழ் இசைப்பதாகவோ கூறுவர். இந்தப் பாடலில் குழல் வண்டு எனப்பட்டுள்ளது. நாயனம், புல்லாங்குழல், யாழ், வீணை, வயலின் முதலிய இசை இயங்களை இசைப்பவர்கள், தியாகராயர் கீர்த்தனையையோ, தீட்சதர் பாடலையோ பாபநாசம் சிவன் பாடலையோ இசை இயங்களில் இசைப்பர். அதுபோல், வண்டு தமிழ்ப் பாட்டைக் குழலில் இசைக்கிறதாம். வண்டே தமிழ்ப் பாட்டை இசைக்கும்போது, இசைவாணர்கள் கட்டாயம் தமிழ்ப் பாட்டு இசைக்கவேண்டும் என்னும் கருத்தைக் கம்பர் சொல்லாமல் சொல்லியுள்ளார். இங்கே தமிழ்ப் பாட்டு என்பது இனிய இசையைக் குறிக்கும். தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை-நயம் என்னும் பொருள் உண்மையைத் தமிழ் தpஇய சாயலார்’ முதலிய இலக்கியப் பாடல் பகுதிகளைக் கொண்டு அறியலாம். தமிழ்நாட்டுக்கு வடக்கே உள்ள பம்பைப் பொய்கையில் வண்டு தமிழ்ப் பாட்டு இசைப்பதாகக் கூறியுள்ள கம்பர், தான் ஆடாவிடினும் தன் தசைஆடும்’ என்னும் முது மொழிக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறார். வண்டு மகரந்தத் தாதுவைப் பூசிக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஆண்-பெண் மலர்களின் கருப் பாகங்களை இணைப்பதற்கு உதவும். இராமனும் சீதையோடு இணைக்கப்பட வேண்டும் என்னும் குறிப்பும் இதில் இலை மறை காயாய் உள்ளது. கண் போலும் குவளை: தன் உள்ளமாகிய தாமரையில் இருப்பவளும் முகில் அனைய கரிய கூந்தலை உடையவளும் ஆகிய சீதையின் கண்மணி போன்ற குவளையே! நீயும் என்னை நலிவடையச் செய்வாயோ! என இராமன் குவளையை நோக்கிப் புலம்புகிறான்.