பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சோழ நாடு வானரர்கள் இத்தகைய தொண்டை நாட்டில் தேடிய பின் சோழநாடு ஏதினர். இடறலும் இழுக்கலும் சோழநாட்டில் நாரைகள் வாழும் நீர்க்கரையில் உள்ள விரும்பத்தக்க தென்னையின் பழங்கள் கீழே விழுந்து கிடப்பதால் அப்பக்கமாகச் செல்லும் வானரர்கள் இடறி விழுகின்றனர்; பல்வகைப் பூக்களிலிருந்து வரும் தேனில் கால்வைத்து வழுக்கி விழுகின்றனர்: "கொடிறு தாங்கிய வாய்க்குழு நாரைவாழ் தடறு தாங்கிய கூனிளம் தாழையின் மிடறு தாங்கும் விருப்புடைத் தீங்களி இடறுவார் நறுந்தேனின் இழுக்குவார்' (48) கொடிறு = குறடு. நாரையின் வாய் குறடுபோல் உள்ளதாம். தடறு=தண்ணீர்க் கரை. தாழை=தென்னை மரம். தென்னைக்கு நீர்வளம் மிகுதியாகவேண்டும்; அதனால் தான், தடறு தாங்கிய தாழை எனப்பட்டது போலும். - தென்னைக்கு, கூன் இளம் தாழை என கூன், இளம் என்னும் இரண்டு அடைமொழிகள் கொடுத்துள்ளார். அடைமொழிகள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. கூன் என்பது அகவை (வயது) முதிர்ந்தவர்க்கு உண்டாகக் கூடியது. பக்கத்தில் இளம் என்னும் அடைமொழி உள்ளது. இளமையில் கூன் விழாதே. கூன் தென்னையை முடத் தெங்கு (31) என்றார் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார். கூனாய் வளைந்த தெங்குதான் இருக்கும். வீட்டில் காய் விழச்செய்யாமல், அடுத்த வீட்டுப் பக்கம் வளைந்து போயிருப்பதால் அடுத்த வீட்டில் காயை உதிர்க்குமாம். கம்பர் பாடியுள்ள கூன் தெங்கு எத்தகையது?