பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 277 தான் வளைந்து இருப்பதால் பறிப்பவர்க்கு எளிதாயிருக் கலாம் அல்லவா? இயற்கை அறிவியலின்படி (Natural Science) நோக்கின், ஞாயிற்றின் வெயில் படாத இடத்திலுள்ள மரம் செடிகள், வெயில் அடிக்கும் பக்கம் நோக்கி வளைந்து செல்லும் என்னும் கருத்து கிடைக்கும். வெயிலின் உதவி கொண்டு தானே இலைகளின் வாயிலாக மாவுப்பொருளை உண்டாக்கிக் கொள்ளல் வேண்டும்? மரங்கள் அடர்த்தியா யிருந்தால் வெயிலுக்காக மரங்கள் வளைந்துதான் போகும். இதனால்தான் போதிய இடைவெளி விட்டுத் தென்னையை நடவேண்டும் என்கின்றனர். எனவே, கம்பர் கூன் தாழை எனக் கூறியிருப்பதைக் கொண்டு, தென்னை மரங்களின் மிகுதியான வளத்தை அறியலாம். இந்தக் கூன் தாழை என்பதைக் கொண்டு தென்னையின் வளமிகுதியை இன்னொரு விதமாகவும் கூறலாம். தென்னையில் நீர் வளத்தால் காய்கள் மிகுதியாய்க் காய்த்திருப்பதால், சுமைதாங்க முடியாமல் கூன் வளைந்த தாகக் கூறலாம் அன்றோ? இன்னும் வேறு என்ன காரணம் இருக்குமோ! மிடறு=கழுத்து. மிடறு தாங்கும்=கழுத்து சுமந்து கொண்டிருக்கும். விருப்புடைத் தீங்கனி= யாரும் விரும்பக் கூடிய தித்திப்பான பழம். தீங்கனி என்பதிலுள்ள தீம் என்பது தான், தேங்காய் என்பதில் தேம் என உள்ளது. இளங்காயை இளநீர் என்பர். முற்றின காயைத் தேறியகாய் என்பர். கனி என்றோ பழம் என்றோ இப் போது தென்னார்க்காடு மாவட்டத்தில் வழங்குவதில்லை. பெரும் பாலான இடங்களிலும் இல்லை என்றே கூறலாம், ஆனால் இலக்கிய வழக்கில் உண்டு. காய் மாண்டதெங்கின் பழம் எனச் சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் கூறியுள்ளார்.