பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதால் தேங்காயை 'முக்கண்ணன் என்றும் இளநீரை முக்கண்ணன் இளை யோன் என்றும் சித்த மருத்துவத்தில் கூறியுள்ளனர். இனிய தென் தமிழ் சோழ நாட்டையும் மலை நாட்டையும் கடந்து இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார் (52) தென் தமிழ் நாடு என்பது பாண்டிய நாடாகும். முத்தும் முத்தமிழும் பாண்டிய நாட்டைத் தேவர் உலகம் ஒக்கும் என்று கூறினால் அது தவறாகும். தேவர் உலகம் எந்த வகை யிலும் முத்தும் முத்தமிழும் கொடுக்கமுடியாது. ஆதலால் என்க: "அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ எத்திறத் தானும் ஏழ்உலகும் புகழ் முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ?” (33) திருத்தகு நாடு= பாண்டிய நாடு. அண்டர் நாடு= தேவர் உலகம். பாண்டிய நாடு தரும் முத்தையும் முத்தமிழையும் ஏழ் உலகும் போற்றுமாம். முத்துக் குளிப்பது பாண்டிய நாட்டுக் கடற்கரையில் என்பது தெரிந்ததே. இங்கே, தொண்டை நாடு சான்றோர் உடைத்து-சோழநாடு சோறு உடைத்து-சேரநாடு வேழம் (யானை) உடைத்து-பாண்டியநாடு முத்து உடைத்து’ என்னும் முன்னோர்மொழி ஒப்பு நோக்கத்தக்கது. பாண்டிய நாட்டு மதுரையில் சங்கம் அமைத்து முத்தமிழை வளர்த்தனர் என்பது பழைய செய்தி. ஒளவையார் நல்வழிக் காப்புச் செய்யுளில், சங்கத்தமிழ் மூன்றும் தா என்று கூறியுள்ளது ஈண்டு எண்ணத்தக்கது.