பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 279 'ஏழ் உலகு புகழ் முத்து' என்றார். உலக நாடுகளுள் பல பாண்டிய நாட்டு முத்துகளை வாங்கிச் சென்றமை வரலாறு கண்ட உண்மை. ‘ஏழ் உலகு புகழ் முத்தமிழ் என்றார் கம்பர். ஞான சம்பந்தர் ஞாலம் மிக்க தண்தமிழ் (558) என்றார், சேக்கிழார் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்' என்றார். பாரதியார், "வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே’ (23) என்று புகழ்ந்தார். இத்தகைய தென்தமிழ் நாட்டில் எங்கணும் சென்று நாடித் திரிந்து கண்டிலர் (55). பின்னர் அங்கிருந்து மயேந்திரமலையை அடைந்தனர் வானரர்கள்.