பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சம்பாதிப் படலம் சம்பாதி என்றால், நன்றாகப் பறப்பவன் என்று பொருளாம். இவன் கழுகு அரசனாகிய சடாயுவின் அண்ணனாம். இனைப் பற்றிய செய்திகள் கூறும் படல மாதலின் இது இப்பெயர் ஏற்றது. அலைகளின் அழைப்பு மயேந்திர மலையை அடைந்த வாணர மறவர்கள், அருகிலுள்ள தென்கடலை நோக்கினர். அந்தக் கடல் பெரு முழக்கம் செய்து, விண்ணளாவ அலைகளாகிய கைகளை நீட்டி சீதை இலங்கையில் இருக்கிறாள்-எனவே இப்பக்கம் வந்து தேடுவீராக’ எனக் கூறி இவர்களை அழைப்பது போன்று காணப்பட்டதாம். 'மழைத்த விண்ணகம் எனமுழங்கி, வான்.உற இழைத்த வெண்திரைக் கரம்எடுத்து, இலங்கையாள் உழைத்தடங் கண்ணிஎன்று உரைத்திட்டு ஊழின்வந்து அழைப்பதே கடுக்கும் அவ்ஆழி நோக்கினார்' (1) மழை பெய்யும் வானம்போல் கடல் முழங்கியதாம்; வெண்மையான அலைகளை வானம் பொருந்த உயர்த்திய தாம். உழை = மான். மான்கண்போன்ற கண்ணை உடைய சீதை இலங்கையில் உள்ளாள் என கண்ணி இலங்கையாள்' என்பதற்குப் பொருள் கொள்ளல்வேண்டும். அலைமேலே எழுந்து பிறகு பின் நோக்கிச் செல்கின்றது. கையால் அழைப்பவர்கள், கையை மேலே தூக்கி நீட்டிப் பிறகு பின்பக்கமாக வளைந்து அழைப்பது வழக்கம். அலையாகிய கையின் செயலும் அத்தகைத்தே. ஊழின் வந்து அழைப்பது