பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 281 =முறைப்படி வந்து அழைப்பது. இங்கே வந்து' என்னும் சொல் நோக்கத்தக்கது. விருந்தினரை அழைப்பவர்கள், உள்பகுதியிலிருந்து விருந்தினரை நோக்கி வந்து தானே அழைப்பார்கள்? அதேபோல, அலையும், கடலின் உள்புறத் தில் தோன்றிக் கரையை நோக்கி வந்து உள்பக்கமாக மடிந்து அழைக்கின்றதாம். புதியவர் ஒருவர் ஒர் ஊருக்குச் சென்றால், ஊரின் முகப்பில் கட்டப்பட்டுள்ள துணிக்கொடி, அவரை வருக வருக என அழைப்பதுபோல் அசைவதாகவோ அல்லது 'வராதே வாரதே’ என விரட்டுவது போல் அசைவதாகவோ சில இலக்கியங்களில் புனையப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், இங்கே கடல் பகுதியாயிருத்தலால், துணிக் கொடிக்குப் பதிலாகக் கடல் அலையை வைத்துக் கம்பரின் எழுத்தாணி விளையாடியிருக்கிறது. வானரர்களின் தவிப்பு பல பக்கங்களிலும் அனுப்பப்பட்ட வானரர்கள் சீதையைத் தேடிக் காணாமையால் முன் குறித்தபடி அனைவரும் மயேந்திர மலைக்கு வந்து ஒன்று திரண்டனர். அவர்கள், சுக்கிரீவனின் ஆணையையும் குறித்த நாளில் நிறைவேற்றவில்லை; இந்நிலை நீடித்தால் இராமனும் துயர் தாங்காது இறந்து படுவான்; எனவே, தாமும் வடக்கிருத்த லாகிய அருந்தவம் புரிந்து உயிர் விடலாமா? அல்லது நஞ்சருந்தி இறந்து போகலாமா என்றெல்லாம் கூறித் தம் உயிர்க்கு முடிவு தேடலானார்கள். 'அருந்தவம் புரிதுமோ அன்னது அன்றெனின் மருந்து அருநெடுங்கடு உண்டு மாய்துமோ திருந்தியது யாது.அது செய்து தீர்தும்என்று இருந்தனர் தம்உயிர்க்கு இறுதி எண்ணுவார்’ (5)