பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு உயிர்விட இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உண்ணாது உயிர் போகும் வரை வடக்கு நோக்கியிருந்து தவம் செய்தால் தானாக உயிர்போய் விடும். மற்றொன்று தற்கொலை, அதாவது நஞ்சு உண்டு இறத்தல். கடு = நஞ்சு. நெடுங்கடு = மிக்க வலிமை வாய்ந்த - அதாவது விரைவில் உயிர் போக்கக் கூடிய நஞ்சு, மருந்து அரு = மருந்து இல்லாத அதாவது, அந்த நஞ்சை உண்டுவிடின், பிறகு அதைப் போக்குவதற்கு மருந்தே கிடையாது; அத்தகைய நஞ்சு, கடமையை முடிக்காமல் உயிர் வாழ்வதனினும் இறப்பதே மேல் என அவர்கள் எண்ணியது அவர்களின் கடமை உணர்வைக் காண்பிக்கிறது. . அங்கதன் சொன்னது செய்வோம் என்று உறுதி கூறியபடி செய்து முடிக்க வில்லை. இதைப் போய் விரைவில் இராமனுக்குத் தெரிவிக்கும் துணிவும் நமக்கில்லை. இனித் தேடிக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் இல்லை. இதுதான் நட்புக்கு அழகோ - என்று அங்கதன் கூறினான்: "செய்தும் என்று அமைந்தது செய்துதீர்க் திலம் கொய்து சென்று உற்றது நுவலகிற் றிலம் எய்தும் வந்து என்பதோர் இறையும் கண்டிலம் உய்தும் என்றால் இதுஓர் உரிமைத் தாகுமோ” (8) ஒன்றும் செய்யாது நாம் உயிர் வாழ்வது நட்புக்கு அடையாளமாகாது - என்றான். அது கேட்ட கரடி அரசனான சாம்பவான், அங்கதனே! நாங்கள் இறந்து விடலாம்; ஆனால் நீ இருக்க வேண்டும் என்றான். அதற்கு அங்கதன் கூறுவான்: ' -- முதலில் நான் - . . வானர' மறவர்கள் பழிக்ரு அஞ்சி உயிர் விட்டும், அங்கதன் மட்டும் உயிரோடு இருக்கலாமா என உலகோர் கூறுமுன் யான் முதலில் மாளுவேன் என்றான் அங்கதன்: