பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 283 "சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன்னுயிர் போன்றவர் மடிதரப் போங் துளான் என ஆன்றபேர் உலகுளோர் அறைதல் முன்னம் யான் வான் தொடர்குவன் என மறித்தும் கூறுவான்' (13) தன் உயிரை ஒத்த மற்றவர்கள் பழிக்கு அஞ்சி இறந்து விட்டனர்; ஆனால் அங்கதன் பழிக்கு அஞ்சாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ஆன்றோர்கள் கூறும் முன் தான் இறந்துவிட எண்ணுகிறான் அங்கதன். இக்காலப் போர் முறைக்கும் அக்காலப் போர் முறைக்கும் உள்ள வேற்றுமை இங்கே நன்கு புலப்படு கின்றது. இக்காலத்தில் படைத் தலைவர்கள் பாதுகாப்பாக ஒரிடத்தில் தங்கியிருப்பர்; படை மறவர்களே போர்க்குச் செல்வர் - சென்றவர் செத்துப் போதலும் உண்டு. ஆனால், அக்காலத்தில், படைத் தலைவனாகிய அங்கதன் தான் முதலில் உயிர் இழக்கத் துணிகிறான். திறமை உடையவர் களே மற்றவரை வழி நடத்த முடியுமாதலின், தலைவர்கள் முதலில் போகாமல் இருப்பதும் பொருத்தமே. அனுமனின் அறிவிப்பு இவ்வாறாக அங்கதனும் சாம்பவானும் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அனுமன் கூ ற லா னா ன் : படைஞர்களே! மூன்று உலகங்களில் இன்னும் ஒன்றில்கூட நாம் முழுதும் தேடவில்லை. பாதாளத்தில், விண்ணில், மலை முகட்டில், வெளி அண்டத்தில் ஆகிய இடங்களி லெல்லாம் சென்று எப்படியாவது சீதையைக் கண்டு பிடித்து விட்டால், நாள் கடந்து விட்டதென்று நாயகன் சினவான். நான் பல இடங்கட்கும் இன்னும் சென்று தேடிச் சடாயு போல் இறத்தலும் தகும் - என்றான்: 'பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில் பொன்வரைக் குடுமியில் புறத்துள் அண்டத்தில் கன்னுதல் தேவியைக் காண்டும் காமெனில் சொன்ன நாள்.அவதியை இறைவன் சொல்லுமோ” (20)