பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு "நாடுதலே கலம் இன்னும் நாடியத் தோடலர் குழலிதன் துயரிற் சென்றுஅமர் வீடிய சடாயுவைப் போல வீடுதல் பாடலம் அல்லது பழியிற்றாம் என்றான்” (21) பிலம், வானம், மலை, அண்டம் எல்லாவற்றிலும் தேட வேண்டுமெனக் கூறினான். இவற்றுள் எங்கேயாவது ஓரிடத்தில் சீதை இருந்துதானே தீர வேண்டும். வெற்றி கிடைத்துவிடின் காலம் தாழ்ந்தது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவதி = கால வரையறை. கால எல்லையும் கவனிக்கப்பட வேண்டியதே. ஆங்கிலப் படை ஒன்று, ஐரோப்பாவிலேயே கடலோரமாயிருக்கும் நாட்டின் ஒரு கரையில் தம் படையை இறக்க வேண்டும் எனத் தலைவன் காலமும் குறித்திருந்தானாம். காலம் காலை 8 மணியாகும். ஆனால் படை சிறிது காலம் தாழ்த்து இறக்கப்பட்டுப் போருக்குச் சென்று வெற்றியும் பெற்று விட்டதாம். பின் தலைவன், படைகளோடு காலம் தாழ்த்தது பற்றி ஆராய்ந்தானாம். இனி இத்தகைய காலத் தாழ்ப்பு என்றும் ஏற்படலாகாது என்று வலியுறுத் தினான். எவ்வளவு நேரம் காலத் தாழ்ப்பு ஏற்பட்டது எனில், ஒரே ஒரு மணித்துளி (நிமிட) நேரம்தானாம். அதாவது 8 மணி ஒரு நிமிடத்தில் படை இறங்கியதாம். இந்த ஒரு நிமிடக் காலத் தாழ்ப்பையும் தலைவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (தலைவன் பெயரும் படை இறக்கப்பட்ட நாட்டின் பெயரும் நினைவில்லை. பொறுத்தருள்க.) இது நடந்தது உண்மை. பகைவரைப் பொறுத்தமட்டில் கால நீட்டிப்பு கூடாது என்பதனை, "வினைபகை என்றிரண்டின் எச்சம் கினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்' (674)