பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 285 என்னும் குறட்பாவும் வலியுறுத்துகிறது. இந்த அடிப்படை யில்தான், அனுமன் முதலியோர், காலத் தாழ்ப்பு கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாயிருந்தனர் போலும். சம்பாதியின் நிலைமை சடாயு இறந்து விட்டான் என அனுமன் வாயிலாக வந்த செய்தியைச் சம்பாதி கேட்டதும் உணர்ச்சி வயப் பட்டான்; வெகுண்டான்; நெஞ்சு படபடத்தான்; உடல் பதை பதைத்தான்; தம்பி இறந்ததற்காக அவன் அழுத கண்ணிர் கடலோடு சேர்ந்து கடல் நீரின் அளவைப் பெருக்கியதாம். அஞ்சத்தக்க உருவு கொண்டு வானரர் களை நோக்கி வந்தானாம். அவனைக் கண்டு வானரர்கள் அஞ்சினராம். அவன் அரக்கனாயிருப்பானோ என அஞ்சி அவனை நெருங்கியபோது, அவனது கண்ணிரைக் கண்டதும், அவன் கொடியவன் அல்லன் என அனுமன் உணர்ந்து கொண்டானாம் அண்ணன் சம்பாதி அனுமன் சம்பாதியை நோக்கி நீயார் என்று வினவச் சம்பாதி கூறலானான்: நான் முன்பிறந்த தமையன்; சடாயு என் பின் பிறந்த தம்பி. அந்தோ அவனைப் பிரிந்து விட்டேன். உடன் பிறந்தவர்கள் இருப்பின், ஆகாத நன்மையும் உண்டோ என்று கூறினான். "மின்பிறந் தாலென விளங்கு எயிற்றினாய் என்பிறந் தார்க்கிடை எய்தலாய, என் பின்பிறந் தான்துணை பிரிந்த பேதையேன் முன்பிறந் தேன் என முடியக் கூறினான்' (31) எய்தலாத = அடைய முடியாதவை (வினையால் அணையும் பெயர்). தம்பியுளான் படைக்கு அஞ்சான்’ என்பது முன்னோர் மொழி. “எம்பியை ஈங்குப் பெற்றேன்