பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 25 'நெஞ்சுபூத்த தாமரையின் நிலையம் உவந்தாள் நிறம்பூத்த மஞ்சுபூத்த மழைஅனைய குழலாள் கண்போல் மணிக் குவளாய்! நஞ்சுபூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ! (31) நெஞ்சு பூத்த தாமரை - உள்ளத் தாமரை. மஞ்சு பூத்த மழை = முகில். குழலாள் = சீதை. குவளை இராமனைப் பார்த்துச் சிரித்துத் துன்புறுத்துகிறதாம். சிரிப்புக்கு வெண்ணிறப் பகுதி வேண்டுமே - குவளை கருநிறம் உடையதாயிற்றே. நஞ்சு = கருநிறம் உடையது. 'நீல கண்டன்' என்பதில் கழுத்தில் உள்ள நஞ்சு நீலநிறம் உடையதென்பதை அறிவிக்கும் அல்லவா? நஞ்சு போன்ற கருஞ் சிரிப்பால் குவளை வருத்துகிறதாம். உள்ளத்தைத் தாமரையாக உருவகிப்பது ஒருவகை இலக்கிய மரபு, குமரகுருபர அடிகளார் சகல கலா வல்லி மாலை என்னும் நூலில், "வெண்தாமரைக் கன்றி நின்பதம் தாங்களின் வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொல்லோ’ (1) என உள்ளத்தைத் தாமரையாக உருவகித்திருப்பது காண்க. திருக்குறளிலுள்ள மலர் மிசை ஏகினான்’ என்னும் பகுதியில் உள்ள மலர்' என்பதற்கு உள்ளக்கமலம்' எனப் பரிமேலழகர் விளக்கம் தந்துள்ளார். இதய பதுமம் - சிவஞான சித்தியார் - உரை. (9.9) திருமகள் தாமரையில் இருப்பவள். எனவே, சீதையாக வந்திருக்கும் திருமகள், திருமாலின் தெய்வப் பிறவியாகிய இராமனது உள்ளமாகிய தாமரையில் இருப்பதாகக் கூறியுள்ள ஒரு குறிப்பு இதில் மறைந்திருப்பது காண்க.