பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என் எனக்கு அரியது என்றான்” (1760) என்பது சீவக சிந்தாமணிப்பா. சம்பாதியின் பிரிவுத்துயர் சடாயு இராவணனால் கொல்லப்பட்டான் என அனுமன் கூற அறிந்து சம்பாதி புலம்பலானான்: தம்பியே ஞாயிற்றின் வெப்பத்தால் சிறகுகளை இழந்து வருந்தும் யான் இறந்திருக்கலாம். ஆனால் இளையவனான நீ இறந்தது என்ன முறையாகும். நான்முகன் இன்னும் உள்ளான். மண்ணுலகமும் விண்ணுலகமும் இன்னும் உள்ளன. அறமும் இன்னும் உள்ளது. கற்பம் என்னும் காலமும் இன்னும் உளது. ஆனால் நீ மட்டும் இல்லாமல் இறந்து போனது எப்படியோ? 'இளையா நீள்சிறகு இன்றி வெந்துகத் தைைளயானேன் உயிர் போகத் தக்கதால் வளையா கேமியன் வன்மைசால் வலிக்கு இளையானே இது என்ன மாயமோ” (34) "மலரோன் கின்றுளன் மண்ணும் விண்ணும்.உண்டு உலையா நீடறம் இன்னும் உண்டரோ கிலையார் கற்பமும் கின்றது இன்றுநீ இலை யானாய் இது என்ன தன்மையோ?” (35) ஞாயிற்றின் வெப்பம் தாளாமல் ஒருமுறை தம்பி சடாயு வருந்திய போது, தமையன் சம்பாதி தன் சிறகு களை விரித்துத் தம்பியை அடக்கிக் கொண்டு காத்துத் தன் சிறகுகளை வேகச் செய்து கொண்டான். அதனால் தான், சிறகுகளை இழந்து வருந்தும் தான் இறந்திருக்க லாம் - தம்பி சயாயு இறந்திருக்க வேண்டியதில்லை என வருந்துகின்றான். வளையா நேமியன் = ஞாயிறு. வன்மை சால்வலி = வலிமை மிக்க ஞாயிற்று வெப்பத்தின் கொடுமை.