பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சம்பாதியின் பாராட்டு சம்பாதி தன் தம்பி சடாயுவின் இறப்பைப் பாராட்டு கின்றான்: உண்மையாய் நட்பாடல் வல்ல இராமனுக்காக என் தம்பி உயிர் விட்டது மிகவும் நன்று என்று கூறினான்; கடலெனப் பெருக்கெடுக்கத் தொடங்கிய கண்ணிரை மறைத்துக்கொண்டான். "விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய் தெளித்து ஆடத்தகு தீர்த்தன் மாட்டுஉயிர் அளித்தானே அதுகன்று நன்று எனாக் களித்தான் வாரி கரந்த கண்ணான்' (43) மெய்ம்மையோய் = அனுமனே. தீர்த்தன் = தூய இராமன். கண்ணினான் = கண்ணிரை மறைத்த சம்பாதி. நல்ல பயனுக்காக உயிர் தந்தது நன்று நன்று எனப் பாராட்டுகிறான். நன்று நன்று = அடுக்குத் தொடர். பாராட்டினாலும், பிரிவைத் தாங்க முடியாமையால் எழும் கண்ணிரை மறைத்தும் கொள்கிறான். இங்கே சிலம்புப் பகுதி ஒன்று நினைவிற்கு வருகிறது. மாதரி வீட்டில் உணவு கொண்ட பின், கோவலன், கண்ணகியை நோக்கி, என் கண்ணே கண்ணகி நான் கடைத்தெருவிற்குச் சென்று சிலம்பை விற்று வருவேன் - நீ வருந்தற்க என்று கூறி, தனித்து விட்ட கண்ணகியைத் தழுவுகிறான்; அப்போது வெளிவரத் தொடங்கிய கண்ணிரை மறைத்துக் கொள்கிறான். இதனை வருபனி கரந்த கண்ணனாகி என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இராமாயணத்தில் சடாயு இறந்தான். சிலம்பில் கோவலன் இறக்கப் புறப்பட்டான். மேலும் சம்பாதி கூறுகிறான்: இராமன் பத்தினியாகிய சீதையை மீட்கத் தம்பி உயிர் துறந்தான். இதை உண்மை யில் உயிர் துறந்ததாகக் கூற முடியாது. புகழுடம்போடு