பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 289 இன்றும் இருக்கிறான் - என்றும் இருப்பான் என்றே கூற வேண்டும். "பைங்தார் எங்கள் இராமன் பத்தினி செந்தாள் வஞ்சி திறத்து இறந்தவன் மைந்தார் எம்பி வரம்புஇல் சீர்த்தியோடு உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ?” (44) வஞ்சி = வஞ்சிக்கொடி போன்ற சீதை. எம்பி = தம்பி சடாயு. சீர்த்தி = புகழ். உய்ந்தான் = உயிர் பிழைத்தான். உலந்தது = இறந்தது. இத்தகைய இறப்பை, ஊன் உடம்பு ஒழிந்ததே தவிரப் புகழ் உடம்புடன் இருப்பதாகக் கூறுதல் மரபு. இதைத்தான் 'உளதாகும் சாக்காடு’ (235) என்றார் வள்ளுவர். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே (165-1, 2) என்பது புறநானூறு. புகழை நிலை நிறுத்தி மாண்டவர்கள் என்றும் நிலைத்திருத்தலை உடையவராம். மன்னுதல் = நிலைத்திருத்தல். மேலும் சம்பாதி கூறுகிறான்: அறக்கடவுள் போன்ற இராமன்பால் கொண்ட அன்பும் நட்பும் என்றும் இருப்ப தோடு தனது உயிரும் என்றும் இருக்கவும் உடம்பை விட்டுப் பிரிந்தான். இது எல்லார்க்கும் கிடைக்காத பெரும் பேறாகும். இத்தகையோர்க்கு இறப்பு ஒர் இழப்பும் ஆகாது. இத்தகைய இறப்பைவிட இன்பம் தரத்தக்கது வேறு யாது? ஒன்றும் இல்லை. 'அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு உறவு உன்னா உயிர்ஒன்ற ஒவினான் பெற ஒண்ணாத தோர் பேறு பெற்றவற்கு இறவு என்னாம் அதின்இன்பம் யாவதோ? (45)