பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அறம் அன்னான் = இராமன். உறவு உன்னா = உறவை உன்னி (எண்ணி). உன்னா = செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். யாருக்கும் சாதலைப் போன்றஇனிமை தராத - துன்பம் தரத்தக்க நிலைமை வேறு ஏதும் இல்லை. ஆனால், அந்தச் சாவுகூட, பிறர்க்குத் தக்க நேரத்தில் தக்க உதவி செய்ய முடியாதபோது இனிய தாகும் - செத்தும் போகலாம் - என்னும் கருத்துடைய - "சாதலின் இன்னாதது இல்லை இனிது அது உம் ஈதல் இயையாக் கடை' (230) என்னும் குறள் சுவைத்து மகிழ்ந்து இங்கே ஒப்புநோக்கத் தக்கதாம். சம்பாதி வரலாறு கூறல் வானரர்கள் சம்பாதியின் வரலாற்றைக் கூறுமாறு கேட்க அவன் சொல்லத் தொடங்கினான். யானும் என் தம்பி சடாயுவும் வானுலகம் வரையும் பறந்து செல்ல வேண்டும் எனத் துணிந்து பறந்து கொண்டிருந்தோம். இதைப் பொறுக்காத ஞாயிறு எங்கள் மேல் கொடிய வெப்பத்தை வீசினான். தம்பி சடாயு தாங்க முடியாமல் வருந்தினான். உடனே யான் என் சிறகுகளை அகல விரித்து அவனை மறைத்துக் காத்தேன். ஆனால் என் சிறகுகள் இரண்டும் தீய்ந்து போயின. பின்னர் யான் வேண்ட, இராமன் மனைவியாம் சீதையைக் கண்டு வரச் செல்லும் வானரர்கள் 'இராமன் என்னும் பெயரைப் பலமுறை கூறக் கேட்பாயே யானால் உன் சிறகுகள் மீண்டும் முளைக்கும் என்று வைவுக்கு (சாபத்திற்கு) உய்வு தந்தான். சிறகு இழந்ததால், கழுகு அரசப் பதவியை யான் என் தம்பிக்கு அளித்தேன். என் தம்பியும் மறுக்க அஞ்சி அரசை ஏற்றுக் கொண்டான்என்று கூறினான் சம்பாதி: