பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 391 "எம்பியும் இடரின் வீழ்ந்தான் ஏயது மறுக்க அஞ்சி அம்பரத்து இயங்கும் யாணர்க் கழுகினுக்கு அரச னானான் நம்பிமீர் ஈது எம்தன்மை நீர்இவண் நடந்த வற்றை உம்பரும் உவக்கத் தக்கீர் உணர்த்துமின் உணர என்றான்' (57) வானரர்கள் இராமன் பெயரைப் பலமுறை கூறச் சிறகுகள் முளைக்கப் பெற்ற சம்பாதி, தம் தம்பி கழுகுகட்கு அரசனான கதையை இப்பாடல் வாயிலாகத் தெரிவித் துள்ளான். பார்க்கப் போனால், இராமாயண வரலாற்றில், பெரும்பாலும், அண்ணனது அரசைத் தம்பி யாண்டதான செய்தி பரவலாகக் கூறப்பட்டுள்ளது. இராமனது அரசை அவன் தம்பி பரதனும், வாலியின் அரசை அவன் தம்பி சுக்கிரீவனும், சம்பாதியின் அரசை அவன் தம்பி சடாயுவும், இராவணனது அரசை அவன் தம்பி வீடணனும் ஆண்டதாக வரலாற்றில் காணக் கிடப்பது வியப்பா யுள்ளது. சீதை இருக்கும் இடம் தன் வரலாறு கூறிய சம்பாதி, வானரரின் வரலாற்றைக் கேட்டான். சீதையை இராவணன் எடுத்துச் சென்றான்; தென் திசைப் பக்கம்தான் போயிருப்பான் என எண்ணி இப்பக்கம் வந்திருக்கிறோம் என வானரர்கள் கூற, சம்பாதி தான் அறிந்தவற்றைக் கூறலானான்: வானரர்களே! இராவணன் சீதையை எடுத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றதை யான் பார்த்தேன். அவன் அவளைச் சிறைக்குள் வைத்துள்ளான். நீங்கள் இலங்கை செல்லின் காணலாம். ஆனால், இலங்கை இங்கிருந்து ஒரு நூறு ஒசனைத் தொலைவில் உள்ளது; அந்நாட்டுப் பக்கம்