பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு எமன் தன் பார்வையைச் செலுத்தவும் அஞ்சுவான்; இழி மகனான இராவணனின் சினமோ நெருப்புக்கும் நெருப்பாய் இருக்கக் கூடியது. நீங்களோ நற்பண்புடையவர்கள். அங்கே நீங்கள் அடைவது எவ்வாறு - என்றான் சம்பாதி. 'ஒசனை ஒருநூறு உண்டால் ஒலிகடல் இலங்கை, அவ்வூர் பாச வெங்கரத்துக் கூற்றும் கட்புலம் பரப்ப அஞ்சும், நீசன் அவ்வரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் ஏசறு குணத்தீர் சேறல் எப்பரிசு இயைவது என்றான்' (60) ஒசனை = ஒரு நீட்டல் அளவை. இப்பாடல் சொல்லுக்குச் சொல் சுவைக்கத் தக்கது. இலங்கை எளிதில் செல்லக்கூடியது அன்று - ஒலிக்கும் கடல் சூழ்ந்தது-கடலைக் கடப்பது எவ்வாறு? தொலைவோ ஒரு நூறு ஒசனை கடக்க வேண்டியது. - ஒரு என்பதை ஒரு தோற்றம் - சுமார் - என்னும் பொருளிலும் கொள்ளலாம். அவர் எப்போது இவ்விடம் வந்தார் என்று கேட்டால், ஒரு பத்து மணி இருக்கும் என்று சொல்லும் வழக்காற்றில் ஒரு என்பது சுமார்’ என்னும் பொருளில் உள்ளமை அறியலாம். ஒரு நூறு ஒசனை என்றதால், ஒரு தோற்றம் - சுமார் என்னும் பொருள் கொண்டு நூறுக்கு மேலும் இருக்கலாம் எனப் பொருள் செய்யவும் இடமுண்டு. எமனும் அஞ்சுவானாம் - அவன் எப்பேர்ப்பட்டவன்? உயிர்களைப் பற்றி இழுக்கும் பாசக் கயிறு உடையவன் என்று கூறுவதோடு அமையாமல், எப்போதுமே ஓயாமல் பாசக் கயிறைக் கையிலே கொண்டவன் எனப்பட்டது.