பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 293 உயிர் பறிக்கும் கையாதலின் வெம் கரம் - கொடிய கை எனப்பட்டது. இலங்கையைப் பார்க்க எமன் அஞ்சுவான் என வாளா கூறவில்லை; கட் புலம் பரப்புவதற்கும் அஞ்சு வானாம். கண் பொறி - அதனால் உணரப்படுவது புலம். கட்புலம் பரப்புதல் என்றால் தொலைப் பார்வை செலுத்துதல். அதாவது, தொலைவில் இருந்தபடி, இலேசாக அந்தப் பக்கம் பார்வையைத் திருப்புவதற்கும் அஞ்சுவான் என்பது கருத்து. அந்த அரக்கனோ பண்பில்லா நீசன். அவனது சீற்றமோ (சினமோ), எல்லாரையும் சுடும் நெருப்பையும் சுடத்தக்க நெருப்பாக எரிக்கக் கூடியது. அத்தகைய இடத்தில் நீங்கள் எவ்வாறு செல்ல முடியும்? இயைவது எப்பரிசு? என்று கேள்விக் குறியிடுகிறான் சம்பாதி. விளிவு இலாதீர் மேலும் சம்பாதி கூறுகிறான்: நான் முகனோ, மாதொரு பாகனாகிய சிவனோ, பாம்பணையில் படுத்திருக்கும் திருமாலோ, காற்றோ கூட இலங்கைக்குள் புக முடியாது. அங்குள்ள காவல் அத்தன்மைத்து. எனவே, அழிவு இல்லாதவர்களே! உங்களுக்கு எது சரி - என்ன செய்யலாம் - எப்படிப்போகலாம் - என்றெல்லாம் மேலும் மேலும் நன்கு எண்ணி முடிவெடுத்துச் செல்வீராக - என்றான். 'கால்முகத்து ஒருவன் மற்றை நாரியோர் பாகத்து அண்ணல் பால்முகப் பரவைப் பள்ளிப் பாம்பணைப் பரன் என்றாலும் காலனுக் கேயும் சேறல் அரிது.இது காவல் தன்மை மேல்உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின் விளிவு இலாதீர்” (61)