பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஒரு முகமோ இருமுகமோ இல்லை - நான்கு முகங்களை உடைய பிரமனாலும் சீதையை மீட்கச் செல்லமுடியாது. பெண்ணைப் பக்கத்திலேயே வைத்திருக்கும் சிவனாலும் சீதையாம் பெண்ணைச் சென்று மீட்க முடியாது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர் - அந்தப் பாம்பையே படுக்கையாக்கிக் கொண்டுள்ள திருமாலாலும் இயலாது, அவ்வளவு ஏன்? எங்கும் புகக் கூடிய (காலும்) காற்றும் அங்கே புக முடியாது. கட்டுப்படுத்த முடியாதது - உலவிக் கொண்டேயிருப்பது என்னும் பொருளில் உலவை' என்னும் பெயர் திவாகரநிகண்டிலும், சரித்துக்கொண்டு (சஞ்சரித்துக் கொண்டு) இருப்பதால் சாரிகை’ என்ற பெயரும், எப் போதும் இயங்கிக்கொண்டே இருப்பதால் சதாகதி என்னும் பெயரும் சூடாமணி நிகண்டிலும் காற்றுக்குத் தரப் பட்டுள்ளன. வீமன் வாயு பகவானின் மகன் ஆதலால் 'சதாகதி மகன் என்னும் பெயர் அவனுக்கு வில்லி பாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாயு என்னும் வட மொழிச் சொல்லுக்கே இயங்குவது என்பது பொருளாம். கால் என்பதே கூட செல்லுதல் என்னும் பொருளதே, பந்துக்குள்ளே காற்றை அடைத்துக் கட்டுப்படுத்துகிறோமே எனில், அது உண்மையான கட்டுப்படுத்தலாகாது - சிறு தொளை போட்டாலும் காற்று வெளியே வந்துவிடும் - எனவே, அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவே கொள்ளப்படும். அத்தகைய காற்றும் இலங்கையுள் புக முடியாதாம். இலங்கையின் காவல் அத்தகைய தாம். நீங்கள் ஆராய்ந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்றான். விளிவு இலாதீர்' என விளித்துள்ளான். அதாவது, அழிவு - சாவு இல்லாதவர்களே என்பது பொருள். வீணாய்ச் சென்று சாக வேண்டா என அஞ்சியும் இரக்கப்பட்டும், சாவு இல்லாத வர்களே, என வாழ்த்துவதுபோல் சம்பாதி விளித்துள்ளான்.