பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 295 ஒருவர் ஏகுக மேலும் அறிவிக்கிறான் சம்பாதி; அப்படியே செல்லலாம் என்றாலும், நீங்கள் எல்லாரும் செல்லுதல் என்பது எளியது அன்று - மிகவும் அரிது. செல்லவல்லவர் யாரோ ஒருவர் இருப்பின் அந்த ஒருவர் மட்டும் சென்று, அங்கே மறைந்து உறைந்து, சீதைக்கு ஆறுதலும் நம்பிக்கை யும் ஊட்டி மீண்டும் வருவீராக. ஒருவரும் செல்ல வல்லீர் அல்லரேல், என் சொல்லைத் தெளிந்து நம்பி, நடந்தனவற்றையெல்லாம் இராமனிடம் சென்று சொல்லு வீராக - என்றான். - "எல்லீரும் சேறல் என்பது எளிதன்று அவ்விலங்கை மூதூர் வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்துஅவண் ஒழுகி வாய்மைச் சொல்லிரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி மீடிர் அல்லீரேல் என்சொல் தேறி உணர்த்துமின் அழகற்கு அம்மா!' (62) தோகை = சீதை. அழகன் = இராமன். அவ்வளவு காவல் உடைய இலங்கையில் ஒருவர் செல்லினும் மறைந்திருந்து செயலாற்றவேண்டும் என்றான். அவ்வாறே அனுமன் ஒருவன் மட்டும் சென்று மறைந்திருந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாய்மை பேசுபவர் ஆதலின், இராமனிடம் சென்று நடந்தன கூறுவீராக. ஒருவர் செல்லினும் வாளா திரும்பக் கூடாது. சீதையைக் கண்டு, துன்பப்படாதீர் என்று தேறுதல் கூறியும் நம்பிக்கை ஊட்டியும் வரவேண்டும். வீட்டிற்கு வந்த ஒருவர் திரும்ப வீட்டை விட்டுப் போகும்போது, போய் வருகிறேன்' என்றோ அல்லது