பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு களிற்றின் கனிவு ஆண்யானை தழை உண்ட தன் பிடியின் வாயில் நீர் கொண்டு வந்து ஊற்றும் காட்சியைக் கண்ட இராமன் சீதையை இவ்வாறு ஒம்ப முடியாமல் போயிற்றே என்று இரங்கிச் செய்வதறியாது நிற்கிறான். 'வாரளித் தழை மாப்பிடி வாயிடைக் காரளிக் கலுழிக் கருங் கைம்மலை நீ ரளிப்பது நோக்கினன் கின்றனன் பேரளிக்குப் பிறந்த இல்லாயினான்” (33) வார் அளி = நீண்ட குளிர்ந்த கார் அளி கரிய வண்டுகள். கலுழி = மதப்பெருக்கு. கைம்மலை = யானை. இராமன் பேரருளுக்குப் பிறப்பிடமாயுள்ளவனாம். இவ்வாறு களிறு பிடிக்கு உதவுவது பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. மதுரை நோக்கிச்செல்லும் காட்டு வழியில், ஒரு பொய்கையில் கோவலன் நீர் அருந்திவிட்டு, ஒரு தாமரை இலையைக் குவளைபோல் சுருட்டி அதில் நீர் கொண்டுபோய்க் கண்ணகிக்குக் கொடுத்ததாகக் கூறும் சிலப்பதிகாரப் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது. பாடல்: - “தாமரைப் பாசடைத் தண்ணிர் கொணர்ந்தாங்கு அயர்வுறு மடங்தை அருந்துயர் தீர்த்து' (11:201,202) இந்தப் பகுதியில், கம்பர், இராமனை மக்கள் பிறவியாகவே அடையாளம் காட்டியுள்ளார். மனைவியைப் பிரிந்த மக்கட் கணவனது புலம்பலாகவே இராமனது புலப்பலைப் படைத்துள்ளார். ஒரு காப்பியம் என்றால் ஒன்பான் சுவைகளும் இருக்க வேண்டுமன்றோ? பம்பைப் படலத்தின் தொடக்கத்தில் காமச் சுவையை மிகுதியாகக் கூறிய கம்பர் இங்கே இராமன் வாயிலாக அழுகைச் (அவலச்) சுவைக்கு இடம் கொடுத்துள்ளார்.