பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வாளா வருகிறேன்’ என்றோ சொல்வது மரபு. போகிறேன்’ என்று மட்டும் கூறின், அவ்வாறு சொல்லக்கூடாது - ‘போய் வருகிறேன்’ என்று சொல்லுங்கள் என்று அவருக்குச் சொல்லிக் கொடுப்பது வழக்கம். அவ்வாறே, சம்பாதி, ஒருவர் ஏகி - மீடிர் என்று வாழ்த்துக் கூறியுள்ளான். மீடிர் என்றால், மீண்டு வருக என்று வாழ்த்தி அறிவித்த தாகும். பாடலின் இறுதியில் அம்மா என்று கூறியுள்ளான். 'அம்மா என்பதை இலக்கணத்தில் வியப்பு இடைச் சொல்' என்பர். துன்பமான சூழ்நிலையில் 'அம்மா' என்பதும் உண்டு. சம்பாதி, துன்பமான - கடினமான சூழ்நிலையை எண்ணிப் பெருமூச்சு விட்டவன்போல் 'அம்மா” என்றான் போலும்! பின்னர் சம்பாதி அவ்விடத்தை விட்டு நீங்கி வான் வழியாகப் பறந்து சென்றுவிட்டான்.