பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மயேந்திரப் படலம் மயேந்திர மலையில் இருந்து கொண்டு, இனிச் செய்ய வேண்டியவற்றைக் குறித்து வானரர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வது பற்றிய படலம் இது. மகேந்திரப் படலம் என்றும் சில சுவடிகளில் பெயர் காணப்படுகிறது. உள்ளங்கை கெல்லிக்கனி சம்பாதி அறிவுரை கூறி வான்வழியாகப் பறந்து சென்ற பின்னர், வானரர்கள் தமக்குள் பின்வருமாறு உரையாடிக் கொள்கின்றனர். சம்பாதி பொய் கூறான்; அவன் சொல்லியவற்றைக் கொண்டு நடக்கவேண்டியதை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிந்து கொண்டோம்; பிழைக்கும் வழி அறிந்தோம்; நன்கு எண்ணி நல்லது ஒன்றை விரைந்து செய்யவேண்டும். "பொய்யுரை செய்யான் புள்ளரசு என்றே புகலுற்றார் கையறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரைகண்டாம் உய்யுரை பெற்றாம் கல்லவை எல்லாம்.உற எண்ணிச் செய்யுமின் ஒன்றோ செய்வதை நொய்தில் செயவல்லிர்' (1) 'நன்றே செய்ம்மின் - நன்றும் ஒன்றே செய்ம்மின் - ஒன்றும் இன்றே செய்ம்மின் - இன்றும் இன்னே செய்ம்மின் என்பது போன்ற கருத்து இப்பாடலில் பேசப்பட்டுள்ளது. கையுறை நெல்லி = கையிலே உள்ள நெல்லிக்கணி. நொய்தில் = விரைவில். சம்பாதியால் பெற்ற உறுதியான தெளிவுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி உவமையாக்கப் பட்டுள்ளது.