பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மேலும் உரையாடல்: சீதையைக் குறித்த காலத்தில் தேடிக்காண இயலாமையால் இறந்து போகலாம் - அல்லது - சுக்கிரீவனிடத்தில் சென்று நிலைமையைக் கூறிவிடலாம் என்று முதலில் எண்ணினோம்; இப்போதோ, இரண்டும் வேண்டா - எப்படியாவது இலங்கை சென்று அரக்கரைக் கொன்று ஆவன செய்வோம் என்னும் முடிவுக்கு வந்துள்ளோம்; கடல் கடந்து சென்று காரியம் முடிக்க வல்லார் யாவர் என யாராவது தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். "மாள வலித்தோம் என்றும் இம்மாளா வசையோடு மீளவும் உற்றேம் அன்னவை தீரும்வெளி பெற்றேம் காள நிறத்தோடு ஒப்பவர் மாயக் கடல்தாவுற்று ஆளும் நலத்தீர் ஆளுமின்னம் ஆருயிர் அம்மா” (2) வெளி = வழி. காளம் = நஞ்சு. காள நிறத்தோ டொப்பவர் = அரக்கர். இரண்டிற்கு இடையே வானரர்கள் சிக்கிக் கொண்டிருந்தனர். ஒன்று மாள்வது - மற்றொன்று மீள்வது. இப்போது இவ்விரண்டையும் தாண்டி வெளிவந்து விட்டமையால் வெளி பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆளுமையுடையவர் சென்று அரக்கரை வென்று எம் (மற்ற வர்களின்) உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று உரையாடிக் கொண்டனர். சறுக்கியது சாக்கு சாம்பவன் சொல்லலுற்றான்; திருமால் நெடிய உருவம் எடுத்து உலகை அளந்த காலத்தில், அவர் விண்ணை அளந்தபோது, நான் அதைப் பறையறைந்து எல்லாத், திக்குகட்கும் தெரிவித்துக் கொண்டு சென்றபோது, மேரு மலை காலை இடறியதால் கால் ஊனம் உற்றேன். அதனால், என்னால் கடலைத் தாண்ட முடியாது; வேறு யாராவது இதைச் செய்க என்றான்.