பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 299 "வேதம் அனைத்தும் தேர்தர ஒட்டா ஒரு மெய்யன் பூதலம் முற்றும் ஓரடிவைத்துப் பொலிபோழ்து யான் மாதிரம் எட்டும் சூழ்பறை வைத்தேவர, மேரு மோத விளைத்தே தாள் உலைவுற்றேன் விறல் மொய்ம்பீர்' (4) "சறுக்கியது சாக்கு என்பர். அவ்வாறு சாம்பவன் கடமையினின்று தன்னைக் கழற்றிக் கொண்டான். அதே நேரத்தில், மற்றவர்களைக் குறிப்பிட்டு, நீங்கள் வெற்றி பெறத்தக்க வலிமை உடையவர்கள் எனப் புகழ்ந்தான் (அதாவது ஐஸ் வைத்தான்). விறல் மொய்ம்பீர்' என்பது தான் அது. நீலன் - அங்கதன் நீலன் முதலாய வீரர்கள், எங்களால் கடலைத் தாண்டிக் கடக்க முடியாது எனத் தெளிவாய்க் கூறி விட்டனர். வீராதி வீரனான அங்கதனோ, நான் கடலைத் தாண்டிச் செல்ல முடியும்; ஆனால் மீண்டு வர முடியாது எனத் தன் கை வரிசையைச் சொல்லி விட்டான். "நீலன் முதற்பேர் போர்கெழு கொற்ற நெடுவீரர் சால உரைத்தார் வாரி கடக்கும் தகவின்மை: வேலை கடப்பேன் மீள மிடுக்ககின்று எனவிட்டான் வாலி யளிக்கும் வீர வயப்போர் வசையில்லான்' (6) எல்லாராலும் கடல் கடக்க முடியாது என்பது உண்மையே. அங்கதனோ, நான் சென்று விடுவேன் - ஆனால் உயிரோடு மீண்டுவரும் நம்பிக்கை எனக்கு இல்லை என ஒளிக்காமல் வெளிப்படையாகச் சொல்லி விட்டான். ‘நான் சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று மோதுவேன்’ என்று ஓரிடத்தில் ஒருவர் சொன்னார்; சிங்கத்தின் குகையிலே சென்று சிங்கத்தோடு மோதலாம் . ஆனால் உயிரோடு திரும்பி வரவேண்டுமே என மற்றொருவர்