பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கூறினார். அங்கதன் கதையும் இதுவேதான். இவ்வாறு ஒவ்வொருவரும் கூறிச் .சுமையை. இறக்கி வைத்து விட்டனர். இங்கே ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அண்ணன் தம்பிகள் நால்வர் - அவர்களுள் மூவர் துடுக்கானவர்கள் - இளையவனான ஒருவன் மட்டும் தொடை நடுங்கி. துடுக்கான மூவரும் எதிரியோடு போரிட்டுக் கொண்டிருந்தனர். தொடை நடுங்கி தன் அண்ணன்மாரை நோக்கி, அண்ணே - அண்ணே! அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் - நானும்.அந்த எதிரியை ஓர் அடி அடித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றானாம். இந்த மாதிரியை நோக்கி வானரர்களின் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. படைத்தலைவனான அங்கதனே கையை விரித்து விட்டான் - அனுமனைத் தவிர்த்த மற்றவர் அனைவரும் கையைக் கழுவி விட்டனர். தேர்ந்தெடுப்பு o சாம்பவன் எண்ணிப் பார்த்தான். அனுமனே இத்ற்கு ஏற்றவன் எனத் துணிந்தான். காரணம் உருசிய முக மலையில் சுக்கிரீவன் மறைந்து இருந்தபோது, இராம இலக்குவர் அங்கே வர, அனுமனே. துணிந்து சென்று. அவர் களோடு தொடர்பு கொண்டான்; மேலும், பின்பற்ற வேண்டிய முறைகளையெல்லாம் பின்பற்றிச் சுக்கிரீவனுக்கு வெற்றி தேடித் தந்து அரசனாகவும் ஆகச் செய்தான். 'ஆரியன் முன்னர்ப் போதுற வுற்ற, அதனானும். . காரியம் எண்ணிச் சோர்வற:முற்றும் கடனானும் மாருதி ஒப்பார். வேறிலை.என்னா அயன்மைக்தன் , சீரியன் மல்தோள் ஆண்மை தெரிப்பான் இவைசெப்பும்' ஆரியன் = இராமன். 'அய்ன் மைந்தன் = பிர்மனின் மகனாகிய சாம்பவன். சீரியன் = அனுமன். தெரிப்பான் =