பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 301 தெரிவிப்பதற்காக - பான் விகுதி ஏற்ற வினையெச்சம். அனுமனின் தோள் வலிமையை அறிவிப்பதற்காக, அவன் முன் செய்த இரண்டு துணிவான செயல்கள் முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டுள்ளன. அனுமனின் ஆற்றல் சாம்பவன் அனுமனை நோக்கிப் பின்வருமாறு கூறிக் கடலைத் தாண்டுவதற்கு ஆயத்தப்படுத்தலானான். பிரமன் இறந்தாலும் இறவாத ஆற்றலைப் பெற் றுள்ளவனே! நல்ல நூல்களை எல்லாம் கற்றுணர்த்தும் அறிவினோய்! எமனும் அஞ்சக் கூடிய சினமும் வலிமையும் உடையவனே! கடமை தவறாதவனே! சிவனைப்போல் போர் புரியும் ஆற்றல் உடையவன்ே! "மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளிர் நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர் காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர் கடன்கின்றீர் ஆலம் நுகர்ந்தா னாமென வெம்போர் அடர்கிற்பீர்' (9) விரிஞ்சன் = பிரமன். என்றும் இறவாமை (சிரஞ்சீவித் துவம்) பெற்றவன் அனுமன். மிகை நாள் = மிகுதியான வாழ்நாள். நூலை நன்கு கற்றிருத்தலோடு அமையாது, கற்றதைப் பிறர்க்கு நன்கு உணர உரைக்கும் ஆற்றலும் உடையவன் அனுமன். ஈண்டு, “இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்” (650) என்னும் திருக்குறட்பா ஒப்பு நோக்கத் தக்கது. ஆலம் நுகர்ந்தான் = நஞ்சு உண்ட சிவன். சிவன் அழித்தல் கடவுளாதலின், சிவனை அனுமனுக்கு ஒப்பாக்கினார். 'நெருப்பு, நீர், காற்று ஆகியவற்றுள் எதனாலும் அழிவு இல்லீர். தெய்வப் படையாலும் அழியீர். உமக்கு