பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஒப்பு நீரே. இந்தக் கடல் என்றென்ன அண்டத்திற்கு அப்பாலும் குதிக்க வல்லீர்” (10) "நல்லவை தீயவை நாடிச் செய்ய வேண்டிய செயலைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வல்லீர். நீரே எதையும் துணிந்து செய்யத் தக்கவர். இலங்கைக்குச் செல்லவும் வல்லீர் - கொல்லவும் வல்லீர் - திரும்பி வரவும் வல்லீர்.” (11) ‘மேரு மலைக்கும்.மேலே செல்லத்தக்க பெரிய உருவம் கொள்ளவும் வல்லீர்! மழைத்துளிகளின் நடுவே நனையாமல் புகுந்து வரக்கூடிய சிறிய உருவம் எடுக்கவும் வல்லர். இந்த நிலத்தையே தூக்கும் வலி உடையீர். பழி இல்லாதவர். ஞாயிற்றினிடம் சென்று ஒரு கையால் தொடவல்லீர்.” (13) போர் புரிதற்கு உரிய காலம் அன்றெனில் அடங்கி யிருப்பீர்! போர் வந்து விட்டாலோ ஆண் சிங்கம் போன்று முனிந்து பொருது வெல்ல வல்லர்: 'அடங்கவும் வல்லீர்காலம் அது அன்றேல், அமர்வந்தால் மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர்" (1) “கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்துஒக்க சீர்த்த இடத்து' (490) என்னும் குறட்பா ஈண்டு ஒப்புநோக்கற் பாற்று. அனுமனே! இலங்கைக்கு ஏ.கி அரக்கனைக் கொன்று சீதையை மீட்டு எங்கள் உயிரையும் இராமனது உயிரையும் காப்பாயாக எல்லாப் பெருங்கடலையும் தாவக் கூடிய நீர், இந்தச் சிறிய கடலைத் தாண்டத்தக்க ஆற்றல் உடையீர்; அதனால் விழ்ைந்து செயலாற்றுக - என்று கூறிச் சாம்பவன் அனுமனை அனுப்பலானான். 'ஏகுமின் ஏகி எம்முயிர்கல்கி இசை கொள்ளீர் ஒகை கொணர்ந்து உம்மன்னையும் உய்யும்படிச் செய்வீர் சாகரம் முற்றும் தாவிடும்நீர் இக்கடல் தாவும் வேகம் அமைந்தீர்என்று விரிஞ்சன் மகன் விட்டான்' (19)