பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 307 நெகுவாய சிகர கோடி நெரிவன தெரிய கின்றான் மகஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்” (28) மடங்கல் சிங்கம். சிங்கங்கள் உள்ள மலை கீழே தாழும் படி மயேந்திர மலைமேல் ஏறி நின்றான் அனுமான். திருமாலின் பத்து அவதாரங்களுள் கூர்மாவதாரமும் ஒன்று. கூர்மம் ஆமை, வாசுகி என்னும் பாம்பின் வாலை மந்தர மலையில் சுற்றிக் கடல் கடைந்தபோது, அந்த மந்தர மலையை திருமாலின் அவதாரமான ஆமை தாங்கிக் கொண்டிருந்ததாம். அந்த ஆமை முதுகில் இருந்த மந்தர மலைபோல், மயேந்திர மலைமேல் நின்ற அனுமன் காணப் பட்டானாம். அனுமனின் தோற்றம் அனுமன் பேருருவம் கொண்டான். அவனுடைய காலில் உள்ள வீரக் கழல்போல் மழைமுகிலின் முழக்கம் ஆர்க்கவும், தன் உருவம் தேவர்களின் கண்கட்கு மேலே தெரியவும், நில உருண்டையைத் தாங்கும் துணின் அடியில் உள்ள கல்லைப் போல் மயேந்திர மலை காணப்படவும், தான் தூண்போலவும் தோற்றம் அளித்தான் அனுமன்: "மின்னெடுங் கொண்டல் தாளின் விக்கிய கழலின் ஆர்ப்பத் தன்னெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ வன்னெடுஞ் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் பொன்னெடுங் தூணின் பாத சிலைஎனப் பொலிந்து கின்றான்' (29)