பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அனுமனின் கால்கள் முகில் மண்டலம் வரையும் சென்றிருப்பதால், முகில் ஆர்ப்பது, அனுமனின் காலில் உள்ள கழல் என்னும் அணி ஆர்ப்பதாகக் கொள்ளும் வகையில் இருந்ததாம். மின் நெடும் கொண்டல்= மின்னலோடு கூடிய நீண்ட மேகம் போல்-கழல் பளபளப்பா யிருந்தது. கண் குறிப்பிட்ட தொலைவில் உள்ள பொருள்களைத் தான் பார்க்க இயலும். மிக்க தொலைவில் உள்ளவற்றைப் பார்க்க முடியாது. இமைக்காது நோக்கும் தேவர்களின் கண் பார்வை கண்டு அறியக் கூடிய தொலைவுக்கு அப்பால் அனுமனின் உருவம் நீண்டு விட்டதாம். வல் நெடுஞ் சிகரகோடி மயேந்திரம் - வலிய நீண்ட பல கோடி உச்சிப் பகுதிகள் மயேந்திரமலையில் உள்ளன வாம். வீடு கட்டுபவர், கீழே ஒரு கட்டை கட்டி அதன் மேலே தூணை நிறுத்துவது உண்டு. அந்தக் கட்டைக் கல் போன்றதாம் மயேந்திரம். அதன்மேல் தூண்போல் அனுமன் நிற்கிறான். தூணாகிய அவனுடைய பாதம் தங்கும் கல்லாக பாதச்சிலையாக மேருமலை உள்ளதாம். இயற்கையை மீறிய இந்தக் கற்பனை அமைப்பை உயர்வு நவிற்சி அணி'யாகக் கொள்ளல்வேண்டும். -- அடுத்து, மயேந்திரமலையிலிருந்து அனுமன் இலங்கையை நோக்கிக் கடலைத்தாவும் செய்தி சுந்தர காண்டத்தில் தொடங்குகிறது. - [-] to-J D