பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 303 ஒகை - உவகை, மகிழ்ச்சி. மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்து எங்களையும் மன்னனையும் காப்பாற்றி நீரும் புகழ் கொள்க - என்று வெறியேற்றி முடுக்கிவிட்டான் சாம்பவன். அனுமன் செயல் தன்னைப் புகழ்ந்ததால் அனுமன் தலை தாழ்த்திச் சிரித்து, வணங்குவான் போல் கைகளைக் குவித்துத் தன் குலத்தவர் மகிழும்படித் தன் மனத்தில் பட்டதைத் தெரிவிக்கலானான்: "சாம்பன் இயம்பத் தாழ்வதனத் தாமரை காப்பண் ஆம்பல் விரிந்தா லன்ன சிரிப்பான் அறிவாளன் கூம்ப லொடுஞ்சேர் கைக் கமலத்தன் குலமெல்லாம் ஏம்பல் வரத்தன் சிங்தை தெரிப்பான் இவைசொன்னான்' (20) தன்னைப் புகழ்ந்ததால் வெட்கத்தால் தலை குனிந்தான் - அதுதான் தாழ் வதனம் எனப்பட்டது. தாமரை போன்ற முகத்தில் உள்ள ஆம்பல் போன்ற வாயைத் திறந்து சிரித்தான். இதுதான், தாமரை நாப்பண் ஆம்பல் விரிந்தால் அன்ன” எனப்பட்டது. வணங்கும் முறையில் கூம்பிய - குவிந்த தாமரை மலர் போன்ற கை களை உடையவனானான். ஏம்பல்வர - மகிழ்ச்சி உண்டாக, வதனம் தாமரை, வாய் ஆம்பல். வத்னத்தை விதந்து கூறித் தாமரையாக உருவகம் செய்திருப்பது போல், வாயை எடுத்து மொழிய வில்லையாதலின் இது ஓரிட உருவகம் (ஏகதேசஉருவக அணி) என்னும் அணியின் பாற்படும். நண்பர்களே! ஏழு கடலையும் தாவிச் சென்று வென்று தேவியை மீட்கும் வல்லமையை உடைய நீங்களே. என்னைச் சென்று வா என்று என் எளிமையைக் காண்பதற்காக