பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஏவினர்க ளாயின், என்னைப் போல் நல்ல பேற்றுடன் பிறந்தவர் வேறு யாராக இருக்க முடியும்? விேரே நினைவின் முன்னே நெடுந்திரைப் பரவை ஏழும் தாய் உலகனைத்தும் வென்று தையலைத் தருதற்கு ஒத்தீர் போயிது புரிதி என்று புலமைதீர் புன்மை காண்டற்கு ஏயினிர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்?” (21) அனுமன் மற்றவர்களை உயர்த்தித் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். நீங்களே, நினைப்பதற்கு முன்னே சென்று தாயை மீட்க வல்லீர் என்பது புகழ்ச்சி. வாயு வேகம் மன வேகம் என்பர். மனம் மிக்க விரைவில் எங்கும் செல்லக் கூடியது. அத்தகைய மனம் நினைத்து முடிவெடுக்கும் முன்னரே நீங்கள் செல்லும் வல்லமை உடையீர் என்பது பெரும் புகழ்ச்சி தானே! புலமை இல்லாத புல்லனாகிய என்னைத் தேர்ந் தெடுத்துள்ளீர்கள் எனத் தன்னைத் தாழ்த்திக் கொள் கிறான். மிக்க வல்லமை உடையவர்களே தன்னை அனுப்புவது தனக்குப் பெருமை என எண்ணுகிறான். ‘என்னின் என்னின் என்பதில் உள்ள முதல் என்னின்’ என்பதற்கு என்றால்’ என்பது பொருள். இது செயின்’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அடுத்த என்னின்’ என்பதற்கு என்னைப் போல’ எனப் பொருள் செய்யின், ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் 'இன்' என்னும் உருபு உள்ளதாகக் கொள்ளல் வேண்டும். அல்லது, ‘என்னைக்காட்டிலும் என்று பொருள் செய்யின், ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருளில் இன் உருபு உள்ளதாகக்