பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 305 கொள்ளல் வேண்டும். செயின்' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தில், இன் வினையெச்ச விகுதியா யுள்ளது. இருவேறு பொருள்கள் தரும் ஒரே சொல்லை அடுத்தடுத்துக் கம்பர் வைத்துச் சுவையூட்டி உள்ளார். இலக்கிய நயத்தோடு இலக்கண நயமும் வேண்டத் தக்கதே. மேலும் கூறுகிறான்: இலங்கையை வேரோடு பெயர்த்து எடுத்து வா எனினும், அரக்கர் அனைவரையும் கொன்று வென்று சீதையை அழைத்து வா எனினும் சொன்ன சொல் தவறாமல் முடிப்பேன் (22) உலகம் முழுவதையும் விழுங்கக் கடல் பெருக்கெடுக் கினும் அண்டமே உடைந்து போ மெனினும், உங்கள் அருளாகிய சிறகும், இராமனது ஏவலாகிய சிறகும் ஆகிய இரண்டு சிறகுகளைக் கொண்டு கருடனைப் போல் பறந்து தாவுவேன்: "முற்றுரீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும் இற்றைநும் அருளும் எங்கோன் ஏவலும் இரண்டு பாலும் கற்றைவார் சிறைக ளாகக் கலுழனின் கடப்பல் காண்டிர்” (24) உலகியலில் அரிய பெரிய செயல் ஒன்றை முடித்த அல்லது முடிக்க வல்ல ஒருவரை நோக்கிப் பிறர் பாராட் டினால் அவர், எல்லாம் உங்கள் அருளாலும் நல்லெண்ணத் தாலும் வாழ்த்தாலுமே முடிகின்றன எனப் பாராட்டு தலுக்குப் பணிமொழி பதிலாகக் கூறுவது வழக்கம். அவ்வாறே, அனுமன் வானரரை நோக்கி நும் அருளும் என்றான். இந்த அருள் ஒரு சிறகாம், இராமன் ஏவல்