பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஒரு சிறகாம். இரண்டு பாலும்=இரண்டு பக்கங்களிலும், கலுழன் - கருடன். அருளும் ஏவலும் சிறகுகளாக உருவகிக் கப்பட்டுள்ளன. இப்பாடலால், அனுமனின் அடக்கமான பண்பு தெரியவரும். மேற்கொண்டு, அனுமன், திருமால் உலகளிக்க வான் உயரத் திருவடியைத் தூக்கினாற்போல் தானும் தன் அடி மேலே தெரியும்படி நீண்ட உருவங்கொண்டு நின்றான். "பொருவரு வேலை தாவும் - புந்தியான் புவனம் தாய பெருவடி உயர்ந்த மாயோன் மேக்குறப் பொலிந்த தாள்போல் உருவறி வடிவின் உம்பர் - ஓங்கினன் உவமை யாலும் திருவடி என்னும் தன்மை - யாவர்க்கும் தெரிய கின்றான்' (26) அனுமனுக்குத் தொண்டின் காரணமாகவும் அவனைப் பிறர் வணங்கத்தக்க பெருமை காரணமாகவும் 'திருவடி" என்னும் பெயர் உண்டு. இப்போது, திருமாலின் ஓங்கிய திருவடிபோல் உயர்ந்த ஒப்புமையாலும் திருவடி என்னும் பெயர் அவனுக்குத் தகும் என்பதைச் செய்து காட்டி விட்டானாம். அனுமன் மயேந்திரமலையை, கடல் கடையத் திருமாலாகிய ஆமைமுதுகின்மேல் இருந்த மந்தரமலையைச் சுற்றிய பாம்புபோலத் தன் வாலால் சுற்றி, மந்தர மலையைப்போல் காணப்பட்டான். - “பகுவாய மடங்கல் வைகும் படர்வரை முழுதும் மூழ்க உகுவாய விடங்கொள் நாகத்து ஒத்தவால் சுற்றி ஊழின்