பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திங்களின் தோற்றம் முனிவர் வாழும் ஒரு பகுதியில் இராம இலக்குமணர் சென்று தங்கினர். அப்போது மாலை வந்து போகத் திங்கள் எழுந்தது. சீதை இல்லாமையால், சுடுகின்ற ஞாயிற்றைப் போலவே, குளிரச் செய்யும் தண்ணிய திங்களும் இராமனுக்கு வெப்ப மீந்து தோன்றியது. இந்து = நிலா. "அந்தியாள் வந்துதான் அணுக அங்கு அணுகுறாச் சந்தமார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் சிந்தியா நொந்துதேய் பொழுது தெறுசீதகீர் இந்துவான் உந்துவான் எரிகதிரி னானென” (38) என்பது பாடல். 'என்றன் பெண்மை கண்டும் காயலாமோ ன்ெணிலாவே” என்பது குற்றாலக் குறவஞ்சி. “தாய்வா யடைந்து மிகுந்தலையை மோதி மோதிச் சலித்தலறக் காய்வாய் நிலவே' என்பது பிரபுலிங்கலீலை. கண் துயின்றில இரவு நேரத்தில் எல்லாம் துயின்றனவாம்; அதாவது; மண், மலை. பண், பணி (பாம்பு), விண், பேய் ஆகிய எல்லாம் துயின்றனவாம். ஆனால் இராமனின் கண்கள் மட்டும் துயில வில்லையாம். "மண்துயின்றன நிலையமலை துயின்றன மறுஇல் பண்துயின்றன விரவு பணி துயின்றன பகரும் விண்துயின்றன. கழுதும்விழி துயின்றன. பழுதுஇல் கண்துயின்றில கடல் துயின்றன களிறு” (40) என்பது பா. மண்ணிலும் மலையிலும் வாழ்வன எல்லாம் துயின்றன. பண்துயின்றன என்றால் = இரவுப் பாடல்கள் அடங்கிவிட்டன என்பதாகும். இரவில் இரைதேடும் பாம்புகளும் புற்றில் அடங்கிவிட்டனவாம். விண்துயிலுதல் என்பது, விண்ணில் இடிமின்னல் ஒன்றுமில்லை என்பதைக்