பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 29 குறிக்கும். கழுது = பேய் பேய் இரவில் நடமாடும் என்பர் - அப்பேயும் துயின்று விட்டதாம் கடல் துயின்றன களிறு' என்பது இராமனைக் குறிக்கும். பால் கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் பிறவியாகிய களிறு போன்ற இராமன் என்பது கருத்து, இராமனின் கண்கள் மட்டும் துயிலவில்லையாம். தாயுமானவரின் பைங்கிளிக் கண்ணி” என்னும் பகுதியில் இவ்வாறு ஒரு பாடல் உள்ளது. சீதையைப் பிரிந்த இராமன் தூங்கவில்லை. அதுபோல், காதலரைப் பிரிந்த காதலி தூக்கம் வரவில்லை எனப் பைங்கிளியைப் பார்த்துக் கூறுகின்றாளாம், "மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுள எலாம் உறங்கும் கண்ணுறங்கேன் எம்இறைவர்காதலால் பைங்கிளியே' (44) என்பது பாடல். இந்தப் பாடலோடு கம்பர் பாடல் ஒப்புநோக்கத்தக்கது. ஞாயிறின் தோற்றம் முதிர்ந்த மெய்யறிவு தோன்றியதும் அறியாமையும் தீவினையும் அகலுமாறு போல, ஞாயிறு தோன்ற இருண்ட இரவு நீங்கியது; பொழுது புலரத் தாமரை மலரலாயிற்று. 'பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் பகையினொடு பங்கமுற் றளவில் வினை பரிவுறும்படி முடிவில் கங்குல் இற்றது கமலம் முகமெடுத்தன கடலில் வெங்கதிர்க் கடவுள் எழ விமலன் வெந்துயரின் எழ” (41) கங்குல் = இரவு. முகத்திற்குத் தாமரை ஒப்பாதலால் தாமரை மலர்ந்ததைக் கமலம் முகம் எடுத்தன எனக் குறிப்பிட்டார். விமலன் = இராமன். இவன் துயர்க் கடலி லிருந்து எழும்படி ஞாயிறு கீழ்க் கடலிலிருந்து எழுந்தது. பின்னர் இராமனும் இலக்குமணனும் சீதையைத் தேடி மேற்செல்வாராயினர்.