பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அனுமப் படலம் அனுமன் இராம-இலக்குமணரைக் கண்டு செயல் ஆற்றியதைப் பற்றிக் கூறுதலின் இது அனுமப்படலம் எனப் பட்டது. இப்பெயருக்குப் பதிலாக, அனுமன் வந்தனைப் படலம், மராமரப் படலம் என்னும் பெயர்களும் சில ஒலைச் சுவடிகளில் காணக் கிடக்கின்றன. இராமனும் இலக்குவனும் சவரி அறிவித்த வழியே ஏகி உருசிய முகம் என்னும் மலையை நெருங்சி அதன்மேல் ஏறினர். இவர்களைக் கண்ட அம்மலைவாழ் சுக்கிரீவன், இவர்கள் வாலியால் ஏவப்பட்டவர்களா யிருப்பார்களோ என அஞ்சி ஒரு குகைக்குள் போய் ஒளிந்துகொண்டான். அவனைச் சேர்ந்த மற்றவர்களும், அனுமனைப் போய் வேவு பார்க்கச் சொல்லிவிட்டுத் தாமும் மறைந்து கொண்டனர். தாழ்சடைக் கடவுள் கடலில் எழுந்த நஞ்சு துரத்தியபோது தேவரும் அசுரரும் காக்குமாறு வேண்ட, அஞ்சாதீர் என்று அவர்கட்கு ஆறுதல் கூறிய தாழ்ந்து தொங்கும் சடையை உடைய கடவுளாகிய சிவனைப் போல, அனுமன் மற்றவர்களை நோக்கி அஞ்சாதிருங்கள் என ஆறுதல் செய்து இராம இலக்குமணரை ஆராயப் புறப்பட்டான். - 'அவ்விடத் தவர்மறுகி அஞ்சி நெஞ்சழி யமைதி வெவ்விடத்தினை மறுகு தேவர்தானவர் வெருவல் தவ்விடத் தனியருளு தாழ்சடைக் கடவுளென இவ்விடத்தினிது இருமின் அஞ்சலென்று இடையுதவி'(3)