பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 31 இப்பாடலில் கம்பர் சிவனது தலைமையைப் பற்றிக் கூறியிருப்பதால், சைவ-வைணவ வேற்றுமை இல்லாதவர் என்பது நன்கு புலப்படும். மாணவப் படிவம் அனுமன் மாணவ வடிவம் கொண்டு இராமனை நோக்கி மறைவாக நெருங்கினான்; இவர்கள் கோலத்தால் தவம் புரிவோராகவும், கைவில்லால் போர் புரிபவராகவும் காணப்படுகின்றனரே! என்ன எதிர்மாறான வியப்பு எனத் தன் கற்பனைத் திறன் கொண்டு பல எண்ணுகிறான்: 'அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரிஅனைய மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவம் கொண்டு வெஞ்சமத் தொழிலர் தவமெய்யர் கைச்சிலையர் என நெஞ்சு அயிர்த்து மறையகின்று கற்பினின் கினையும்'(4) சிறுவன் = அனுமன்; மஞ்சன் = மைந்தன்; வலிமை உடைய இராமன். அஞ்சனையின் மகனான அனுமனை அஞ்சனைக்கு ஒரு சிறுவன் என்றார். தென்னார்க்காடு மாவட்டப் பகுதியில், யான் இன்னாருடைய மகன்’ என்பர். தஞ்சாவூரில், ஒரளவு வயது முதிர்ந்தவரும் தம்மை இன்னாருடைய பையன்’ என்று சொல்வதைக் கேட்கலாம். அந்த முறையில், தஞ்சை மாவட்டத்தாராகிய கம்பர், அஞ்சனைக்கு ஒரு சிறுவன்’ என்றார் போலும் முறைப் பெயருக்கு நான்காம் வேற்றுமை 'கு' உருபு போட வேண்டும் என்பதை மறவாமல் 'அஞ்சனைக்குச் சிறுவன்’ என்றுள்ளார் கம்பர். அனுமன் பிரமசாரி வடிவம்கொண்டு சென்றான் என்பர் பலர். பிரமசாரி என்னும் வட சொல்லுக்கு ஈடாகக் கம்பர் ‘மாணவப் படிவம் என்னும் பெயரை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளமை ஓர் ஆக்கக் (இலாபக்) கணக்கு.