பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 33 'இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவதும் வரவு நோக்கி விம்மலுற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் எம்மலைக் குலமும் தாழஇசைசுமந்து எழுந்த தோளான்” - (16) நீ யார்? உன் பெயர் என்ன? உன் தாய் தந்தையர் யார்? நீ இப்போது எங்கிருக்கிறாய்? யாரிடம் வேலை செய்கிறாய்? இங்கே எங்களிடம் என்ன வேலையாய் வந்தாய்? - என்னும் கேள்விகட்குச் சொல்லவேண்டிய பதில்களை, நீ யார்? - எங்கிருந்து வந்தாய்? என்ற கேள்வி கட்கு உரிய பதிலாய்ச் சுருக்கித் தன் வரலாற்றையே கூறி விட்டான் அனுமன். கேட்ட இராமன், இலக்குமணனை நோக்கி, தம்பி, இவனது திறமையை நோக்கின் இவன் கல்லாத கலையேமறையே உலகில் இல்லை போலும் இவன் சொல்லாலேயே எல்லாம் தெரிகின்றன. இந்தச் சொல்லின் செல்வன்' யாரோ? நான்முகனா யிருப்பானோ? அல்லது சிவனா யிருப்பானோ? என்று கூறி வியக்கிறான்: 'இல்லாத உலகத் தெங்கும் ஈங்கிவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற் றன்றே யார்கொல் இச்சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ விடைவல்லானோ? (18) என்பது பாடல். இளைய வீரன் இலக்குமணன். விரிஞ்சன் = நான்முகன். விடைவல்லான் = விடையூர்தியுடைய சிவன். இராமன் திருமாலின் தெய்வப் பிறவியாதலின், இவன்