பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திருமாலா என்று வினவவில்லை. அனுமனைச் சொல்லின் செல்வன்' என்னும் சிறப்புப் பெயரால் குறித்தமையைக் காப்பியம் கற்போர் பலரும் சுவைத்து மகிழ்கின்றனர். அனுமன் சொல் வன்மையால் சிறப்புற்றான். திருவள்ளுவர் இதற்குச் சொல்வன்மை என்னும் தலைப்பில் பத்துக் குறள்பாக்கள் பாடியுள்ளார். முதல் பாடலை மட்டும் நோக்குவோம். சொல் பேசும் நாக்குநயம் என்கிற நன்மை ஒருவகை உடைமையாகும்; அந்த நாக்கு நலம், மற்ற நலங்களுள் ஒன்றாய் அடங்காமல், யாவற்றினும் சிறந்ததா யுள்ளதாகும் என்பது கருத்து: "நாகலம் என்னும் நலன் உடைமை, அங்கலம் யாங்லத்து உள்ளது.உம் அன்று' (641) என்பது குறள். - "சொல் பிறரைக் காக்கும் கருவி” (320) என்பது நாலடியார்ப் பாடல் பகுதி. அனுமனின் திறமை சுக்கிரீவன் எங்குள்ளான் - அவனைக் காட்டுக என்று கேட்ட இராமனிடம் அனுமன் பின்வருமாறு கூறுகிறான்: மலைபோன்ற தோள்களை உடைய உங்களை ஒத்த மேன்மையர் யாருமிலர். ஆதரவுடன் அவனைக் காண விரும்பினர் என்றால், அவனுக்குத் தீமை விலகித் தவச் செல்வம் வருகிறது என்பது பொருள். பாடல்: "மாதிரப் பொருப்போ டோங்கு வரம்பிலா உலகில் மற்றுப் யூதரப் புயத்துவீரர் நும்மொக்கும் புனிதர் யாரே