பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 35 ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் தீதவித்து அரிதின் செய்த செய்தவச் செல்வம் நன்றே (21) ஒருவரிடம் உதவி வேண்டுவோர் முதலில் அவரைப் புகழ்தல் உலக நடைமுறை. அனுமனிடம் அந்தத் திறமை இருப்பதை இப்பாடல் அறிவிக்கிறது. சுக்கிரீவன் வரலாறு ஞாயிற்றின் மகனாகிய சுக்கிரீவன் இளையவன். இந்திரன் மகனாகிய வாலி மூத்தவன்; சுக்கிரீவனின் தமையன். அண்ணனாகிய வாலி தம்பியாகிய சுக்கிரீவனின் பங்கு உடைமைகளையெல்லாம் பறித்துக் கொண்டு விரட்டி விட்டான். அதனால் சுக்கிரீவன் என்னோடு இம்மலையில் தங்கியுள்ளான். அவனுக்கு மீண்டும் செல்வம் கிடைக்கப் போவதின் அறிகுறியாக நீங்கள் வந்துள்ளீர்கள் என மேலும் அனுமன் கூறினான். பாடல்: - “இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் பரிவிலன் சீறப்போந்து பருவரற்கு ஒருவ னாகி - அருவியங் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்பால் செல்வம் வருவதோர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளிர்' (22) இரவி புதல்வன் சுக்கிரீவன். இந்திரன் புதல்வன் வாலி. பருவரல் = துன்பம். இவ்விருவரின் தாய் ஒருத்தி யாதலால் தமையன் - தம்பிமுறையின ராயினர். குந்தி என்னும் ஒரு தாயினிடத்தில் ஞாயிற்றால் கர்ணனும், எமதருமனால் தருமனும், காற்றரசனால் (வாயு பகவானால்)