பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பீமனும், இந்திரனால் அர்ச்சுனனும் தோன்றியதுபோல் இதையும் கொள்ளவேண்டும். (என்ன நாகரிகமோ இது. அவர்களின் நாகரிகம் இது.) இராமன் ஞாயிறு குலத்தவ னாதலின், சுக்கிரீவன் ஞாயிறின் மகன் என்று அறிவிப்பின், இராமன் சுக்கிரீவன் பால் இரக்கம் காட்டுவான் என்றெண்ணி அனுமன் கூறியதான ஒரு குறிப்பும் இதில் உள்ளது. என் (சு. ச.) நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம், ‘நான் தனித்து விட்டேன்’ என்றார். நிரம்பப் பிள்ளைகளும் கடலனைய சுற்றமும் உடைய அவர் தம் மனைவி இறந்து விட்டதால் - வாழ்க்கைத் துணை என வள்ளுவர் கூறியுள்ள படித் துணையை இழந்துவிட்டதால் அவ்வாறு கூறினார். இங்கேயும், சுக்கிரீவன் ஒருவனாகி இருந்தனன் என அனுமன் கூறியிருப்பது, அவன் மனைவியை இழந்து தனித்துள்ளான் என்றதைக் குறிக்கும். சுக்கிரீவன்மனைவி யாகிய உருமை என்பவளை வாலி கைப்பற்றிக் கொண்டான். ஆதலால் அவன் தனித்தவன் ஆனான். மேலும் அனுமன் சுக்கிரீவனது நிலைமையை விளக்கி அவனுக்கு அடைக்கலம் அளிக்கவேண்டும் என்கிறான்: "நடுங்கினர்க்கு அபயம் கல்கும் அதனினும் நல்லதுண்டோ' (23) என்பது பாடல் பகுதி. மேலும் கூறுகிறான்: தேவர், இயங்குவன, இயங்காதன ஆகிய எல்லாம் உள்ளிட்ட மூவேழ் உலகங்களையும் காக்கவல்ல நீங்கள் எங்களைக் காத்தல் என்பது எளிய செயல். முருகனைப் போன்ற சிறப்புமிக்க உங்களிடம் அடைக்கலம் புகுந்த எமக்கு இதனினும் வேறு நன்மை இல்லை என்றான்: