பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 37 'எம்மையே காத்திர் என்றல் எளிதரோ இமைப் பிலாதோர் தம்மையே முதலிட்டு ஆன்ற சராசரம் சமைத்த ஆற்றல் மும்கை ஏழுலகும் காக்கும் முதல்வர்நீர் முருகற் செவ்வி உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ? (24) என்பது பாடல். இமைப்பிலாதோர் = தேவர். சராசரம் = சர அசரம். இயங்குவன - இயங்காதன. இதின் = இதைக் காட்டிலும். இராம இலக்குமணர்க்கு முருகனை உவமையாக அனுமன் கூறியதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள பொருத்தம் யாது? முருகன் முருகு என்னும் சொல்லுக்கு இளமை, அழகு, தெய்வத் தன்மை என்னும் பொருள் உண்டு. முருகன் என்றால் இம்மூன்றும் உடையவன் என்பது பொருளாம். இதனால் தான் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் என்னும் நூலில், “மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ (70) என்று குறிப்பிட்டுள்ளார். முருகா என ஒருமையில் தொடங்கி நாமங்கள் எனப் பன்மையில் முடித்துள்ளார். 'முருகா என்பதில் இளைஞன், அழகன், தெய்வமணம் கமழ்பவன் என்னும் மூன்று பெயர்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் 'முருகா எனும் நாமங்கள்’’ என்றார். இராம இலக்குமணரும் இளைஞராயும் அழகராயும் தெய்வப்பிறவித் தொடர்புடையவராயும் இருத்தலின், அவர்கட்கு முருகன் ஒப்புமையாக்கப் பட்டுள்ளான். மற்றும், இதனால், கம்பர் சமய வேறுபாடு உடையவர் அல்லர் என்பதும் பெறப்படும். அனுமன் தங்கள் வரலாறு கூறியபின், இலக்குவன் தங்கள் வரலாற்றை - அயோத்தியிலிருந்து - சீதையை இராவணன் எடுத்துச் சென்றது வரை - விடாமல் கூறினான். பின் அனுமன், இராமனின் ஏவல்படிச் சுக்கிரீவனை அழைத்துவரச் சென்றான்.