பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 39 தேவரையும் அசுரரையும் துரத்தி வந்த ஆலத்தைச் (விஷத்தைச்) சிவன் உண்டபின் நடனம் ஆடினானாம். அவனைப்போல் மகிழ்ச்சி மிகுதியால் இப்போது அனுமன் நடனம் ஆடினான். மகிழ்ச்சியின்போது சிறார்களும் குதிப்பது இயல்பன்றோ நடனக் கலையின் அடித்தளமே மகிழ்ச்சி மேலிடுதான். மற்றும், சிவன் இயற்கையிலேயே நடனம் ஆடும் நடராசத் தெய்வ மாயிற்றே. எனவே, அனுமன் நடனம் ஆடியதற்குச் சிவனது ஆடலை ஒப்புமை காட்டியது சாலப் பொருத்தமாம். போதியா உணர்வு இராம இலக்குமணர் யாரும் கற்பிக்காமலேயே - இயற்கையாகவே அளவில்லாத மெய்யுணர்வு உடையவர் என்கிறான் அனுமன் போதியாது அளவிலா உணர்வினார்' என்பது (5) பாடல் பகுதி. மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” என்னும் சிறு பஞ்ச மூலப்பாடல் (22) பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. கல்லாது கற்ற அருளாளர்கள் பலரின் லரலாறுகள் நாம் அறிந்தனவே. மேலும் கூறுவான் அனுமான். பேரரசனாம் தந்தை உதவியும், சிற்றன்னையின் ஒரு சொல்லால் உலகப் பெருஞ் செல்வமாகிய அரசைத் துறந்து தம்பிக்குக் தந்தவன் வந்திருக்கும் இராமன். பாடல்: “உளைவயப் புரவியான் உதவ உற்று, ஒரு சொலால் அளவில் கற்புடைய சிற்றவை பணித்து அருளலால் வளையுடைப் புணரிசூழ் மகிதலத் திரு எலாம் இளையவற்கு உதவி இத்தலை எழுந்தருளினான்’ (8) புரவியான் - தயரதன், சிற்றவை = கைகேயி. மகிதலம் = உலகம். அனுமன் வாயிலாகக் கம்பர், இராமனது குலப்பெருமையை - குடும்பச் சிறப்பை விட்டுக் கொடுக்