பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு காமல் பதமாக - பக்குவமாக உயர்த்திக் கூறியுள்ளார். அப்படியென்றால்தான் சுக்கிரீவனுக்கு நன்னம்பிக்கை தோன்றும். பலரும் வெறுத்த கைகேயியை அளவில் கற்புடைய சிற்றவை என்கிறார். சிற்றவை பணித்தாள் என்றால், கட்டளையிட்டாள் என்பதுதான் பொருள். ஆனால் அதை அருளுடைய செயலாகப் (அருளலால்) பூசி மெழுகி மெருகேற்றி யுள்ளார். இதனால் இராமனுக்கு நன்மை செய்தவள் போல் ஆகிறாள். நீ போய் தாங்கரும் தவம் மேற்கொண்டு - புண்ணியத் துறைகள் ஆடி.வா” என்றாளே-அது இராமனுக்கு நன்மை செய்ததுபோல் தோன்றவில்லையா? இங்கே கம்பர் ஒரு சொலால்' என்னும் தொடரைப் பயன்படுத்தித் தம் நுட்பமான புலமைத் தலைமையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது:- நீ காடு செல் என்றால் சிலர் உடனே செல்ல மாட்டார்கள்; சில்லாண்டுகளாயினும் யான் அரசாள இடம் கொடுங்கள் என்றோ? நான் காட்டில் எவ்வாறு வாழ முடியும்? என்றோ - மூத்தவனாகிய எனக்கே அரசு உரிமையானது என்றோ வாதிடுவார்கள். அதற்குக் கைகேயி பல முறை பதில் தந்து வற்புறுத்தி - கட்டாயப்படுத்தி அனுப்ப வேண்டியிருக்கும். ஆனால் கைகேயி ஒருமுறை சொன்னதுமே, "இப்பணி தலைமேற் கொண்டேன் - இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்” என்று கூறிப் புறப்பட்டுவிட்ட இராமனது உயர்வு ஒரு சொலால் என்பதால் புலனாகும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - நல்லவனுக்கு ஒரு சொல் என்பது உலகியல் வழக்காறாகும். மற்றும், தனது உரிமையைத் தம்பிக்குத் தந்தவன், வாலியைக் கொன்றதும் நமது அரசை அவன் தட்டிப் பறித்துக் கொள்வான் என்ற அச்சமும் வேண்டியதில்லை என்று குறிப்பாயுணர்த்தியதாகவும் கொள்ளக் கிடக்கிறது.