பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 41 மேலும், தமையனாகிய இராமன் தம்பிக்கு அரசு தந்திருப்ப தால், சுக்கிரீவனது தமையனாகிய வாலியிடமிருந்து தம்பிக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவான் என்ற குறிப்பும் இதில் பொதிந்து கிடக்கிறது. சிவனது தலைமை மேலும் அனுமன் கூறுகிறான்: இராமன் பகைவரைக் கொன்று நல்லவர்க்கு அருள் செய்யக் கூடியவன். மேலான சிவன் முதலாய தலைமைத் தெய்வங்களும் வியப்படையும் படியான வலிமை உடையவன். 'பரமுகப் பகைதுமித்து அருளுவான் பரமராம் அரன்முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்’ (10) என்பது பாடல் பகுதி, துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் என்று வடமொழியில் சொல்கிறார்களே - அதுதான், பகை துமித்து அருளுவான்’ என்னும் கம்பரின் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே, சிவனுக்கு முதன்மை கொடுத்திருக்கும் கம்பரின் சமயப் பொதுவுடைமை புலனா கிறது. அனுமன் இவ்வாறு இராமனது வலிமையை விதந்து கூறினமை, சுக்கிரீவனுக்கு இராமனிடம் நம்பிக்கை உண்டாக வழி செய்கிறது. அரசியல் நூல் அரசியல் சூழ்வு நூல் கற்றவனாகிய அனுமன் இவ்வா றெல்லாம் கூறி, இராமனிடம் போவாயாக என்று சுக்கிரீவ னுக்குக் கூறினான். "புந்தியின் பெருமையாய் போதருஎன்று உரைசெய்தான் மந்திரம் கெழுமுநூல் மரபுணர்ந்து உதவுவான்’ (15) புந்தியின் பெருமையாய் = அறிவில் சிறந்த சுக்கிரீவனே. போதரு = போவாயாக அதாவது இராமனிடம் வருவாயாக.