பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இராமனின் பெருமைகளையெல்லாம், கூறியபின், நீ அறிவில் சிறந்தவனாதலின் இவற்றையெல்லாம் ஆய்ந்து பார்க்கின், இராமனிடம் போவதே நல்லது என்பதை ஒத்துக்கொள்வாய் என்னும் கருத்தமையப் புந்தியின் பெருமையாய்' என்று அனுமன் தூக்கி விளித்தான். அனுமன் அரசியல் சூழ்வு நூல் (இராசதந்திரநூல்) கற்றவன் என்பதால், அக்காலத்திலேயே இத்தகைய நூல் இருந்துள்ளது என்பது போதரும். திருக்குறளில் உள்ள பொருள்பால் இந்த நூலின் தகுதி உடையது என்பது தமிழுக்குப் பெருமை தரும். இதைக் கொண்டு, தமிழில் அரசியல் சூழ்வு நூல்கள் பல இருந்திருக்க வேண்டும் என உய்த்துணரலாம். புதுக் கண்டுபிடிப்பு அனுமன் கூறிய சூழ்வுரைகளைத் தன் அறிவுக் கூர்மையால் ஆய்ந்தறிந்த சுக்கிரீவன், அனுமனை நோக்கி, பொன்னைப் போன்றவனே! உன்னையே உடைமையாகப் பெற்ற எனக்கு இயலாதது ஒன்றுமில்லை; இராமனிடம் போவோம் வருக என்று கூறிச் சென்று தனக்குத் தானே ஒத்தவனாகிய இராமனின் தாள் சேர்ந்தான். "அன்னவாம் உரையெலாம் அறிவினால் உணர்குவான் உன்னையே உடைய எற்கு அரியது எப்பொருளரோ பொன்னையே பொருவுவாய் போதெனப் போதுவான் தன்னையே அனையவன் சரணம்வந் த்ணுகினான்" (16) 'உன்னையே உடைய’ என்பது பொருள் பொதிந்த தொடர். நீயே என் முழு உடைமைப் பொருள் எனவும், என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை எனவும், மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன் எனவும் இந்தத் தொடருக்குப் பொருள் கூறலாம். இங்கே புதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். அதாவது: